(ரஞ்சன்)

​இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வு,  (04.02.2026)ஆம் திகதி  காலை மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர்  சோ. ரங்கநாதன் அவர்களின் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது.

நிகழ்வின்பண்பாட்டுப் பன்மைத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் சிறார்களின் அணிநடையுடன் காலை 08.15 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகின.

சம்பிரதாயபூர்வமாக தேசியக்கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளர் அவர்களினால் சுதந்திர தின விசேட உரை நிகழ்த்தப்பட்டது.


​சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதேச செயலக வளாகத்தில் மர நடுகை நிகழ்வு ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.

அணிநடையில் கலந்துகொண்ட சிறார்களை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்குப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் சி. கமல்ராஜ், கணக்காளர் திருமதி. தி. அம்பிகாபதி, சமுர்த்தி தலைமையக முகாமையாளர் செ. ஜெயராஜா, சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் அ. குககுமாரன் மற்றும் ஏனைய பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.








Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours