(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
நிந்தவூர் பிரதேசத்திற்கான அபிவிருத்தி குழுக் கூட்டம் நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (11) நடைபெற்றது.
இந்த அபிவிருத்தி குழுக் கூட்டமானது அம்பாரை மாவட்ட கரையோர பிரதேச அபிவிருத்தி குழுத் தலைவரும் அரசியலமைப்புப் பேரவை உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவாவின் தலைமையில், நிந்தவூர் பிரதேச செயலாளர் எம்.ஏ.அப்துல் லத்தீபின் ஒருங்கிணைப்பில், ஏனைய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவினால் நிந்தவூர் அபிவிருத்தி தொடர்பாக கல்வி, சுகாதாரம், விவசாயம், மீன்பிடி,மின்சாரம்,வீதி அபிவிருத்தி போன்ற பல்வேறு துறைகளில் காணப்படும் பின்வரும் வேலைத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.
பிரதான வீதி கூழிங் சென்ரருக்கு முன்னால் உள்ள மின்மாற்றி (electric power transformer ) ஐ பொருத்தமான வேறு இடத்திற்கு மாற்றுதல்.
அல்லிமூலை தொடக்கம் மல்கம்பிட்டி சந்தி வரைக்கும் புதிய மின்சார இணைப்பை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
நிந்தவூர் மதீனா மகா வித்தியாலயத்தின் முன் பகுதியால் (கேற் தொடக்கம் வகுப்பறை வரை) மழை காலங்களில் நடந்து பாடசாலைக்குள் மாணவர்கள், ஆசிரியர்கள் வர முடியாத நிலை காணப்படுகிறது.
உடனடியாக அதற்குரிய உள்ளக வீதியை செப்பனிட வேண்டும்.
வெளவாலோடை Beach park ஐ அண்டிய கடற்கரையை சுத்தப்படுத்தி Street Food வசதிகளை ஏற்படுத்தல்.
Germen School பாலத்தின் நிர்மாணப் பணியை மீள ஆரம்பித்தல்.
நிந்தவூர் வைத்தியசாலை வீதியின் பிரதான நாற் சந்தியில் traffic light அமைத்தல்.
அட்டப்பள
(இளையன்ட) பாலத்தை விரிவாக்குவதற்கு நடவடிக்கை எடுத்தல்.
நீண்ட காலமாக நீர் இணைப்பு வழங்கப்படுவதற்கு தோண்டப்பட்ட குழிகளை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுத்தல்.
மாட்டுப்பள்ள கடலரிப்புக்குக்குள்ளான காணிகளுக்கான நட்டஈடு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளல்.
நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் ஆளணி தட்டுப்பாட்டினை (ஆண், பெண்) நிவர்த்தி செய்தல் அத்துடன் OIC க்கான வாகனத்தினை மீளப் பெற்றுக்கொடுத்தல்.
சணச கட்டடத்தினை மீளப் பெற்று, அதனை அரச தேவைக்குரிய அலுவலகமாகப் (CEB க்கு) பயன்படுத்தல்.
பழைய அதான் பாடசாலை வளாகத்தினை புதிய மீன் சந்தை அமைப்பதற்காக சிபாரிசு செய்கின்றேன்.
மோசமான நிலையில் உள்ள GPS வீதியை பிரதான வீதியில் இருந்து 2ஆம் குறுக்கு வீதி வரை காபட் வீதியாக இடுதல்.
பாத்திமா மதரசா அண்மித்த புதிய வீதிக்கான நீர் குழாய் இல்லாத இடங்களுக்கு புதிதாக நீர் குழாயை பொருத்த நடவடிக்கை எடுத்தல் ( New pipe laying).
மத்திய வடிகான் புனரமைப்பு செய்யப்பட வேண்டியுள்ளது.
றவாஹா மையவாடியை மண் இட்டு நிரப்ப வேண்டும்.
மடத்தடி மீனாட்சி அம்மன் கோயில் (நிந்தவூர் -23) வீதி, விருமாண்ட தைக்கா வீதியும் புனரமைப்பு செய்யமாறு விவசாயிகள் கோருகின்றனர்.
நிந்தவூர் GPS வீதி (650M) முழுமையாக புனரமைக்கப்பட வேண்டும்.
நிந்தவூர் வைத்தியசாலைக்கு இரத்த வங்கி (blood bank) வசதியை ஏற்பாடு செய்தல்.
அட்டப்பள்ள கடலரிப்பை தடுக்க நடவடிக்கை எடுத்தல்.
நிந்தவூர் அரச ஒசுசலயை வேறொரு கட்டிடத்திற்கு மாற்றல்.
இலங்கை மின்சார சபையின் நிந்தவூர் கிளைக்கான புதிய கிளையை சணச கட்டிடத்தில் மாற்ற நடவடிக்கை எடுத்தல்.
நிந்தவூர் முத்துமாரியம்மன் கோயிலுக்கான சுற்றுமதிலை உயர்த்தி அதனை அண்டிய உள் பிரதேசத்திற்கு மண் இட்டு செப்பனிடல் போன்ற அபிவிருத்தி வேலைத் திட்டங்களுடன் கடந்த மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் நிந்தவூர் கலாசார மண்டப வேலைகளை விரைவுபடுத்துவதற்கான அனுமதியும் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவின் வேண்டுகோளுக்கு அமையப் பெறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.





Post A Comment:
0 comments so far,add yours