எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு


கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி மீனகயா ரயில் தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.


டிட்வா சூறாவளி காரணமாக தடைப்பட்டிருந்த மீனகயா ரயில் சேவை இன்று (23) முதல் மீள சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்றிரவு 7 மணிக்கு கொழும்பு – கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி மீனகயா ரயில் தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.

அண்மையில் ஏற்பட்ட டிட்வா சூறாவளியால் மட்டக்களப்பு ரயில் மார்க்கம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.

இதன் காரணமாக அந்த மார்க்கத்தின் ஊடான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours