நூருல் ஹுதா உமர்


இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கல்முனை கிளையின் தலைவராக திருமதி ஆரிக்கா காரியப்பர் அவர்கள் மீண்டும் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சங்கத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் இன்று (18) கல்முனையில் நடைபெற்றது. அதில் 2026ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தலைவராக போட்டியின்றி மீண்டும் திருமதி ஆரிக்கா காரியப்பர் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

அவர் முன்னதாகவும் சங்கத்தின் தலைவராகச் செயல்பட்டு, சட்டத்துறையில் தொழில்முறை தரநிலைகளை உயர்த்தும் முயற்சிகள், சட்டத்தரணிகளின் நலன், இளம் சட்டத்தரணிகளுக்கான வழிகாட்டுதல் மற்றும் சமூக நீதிக்கான செயற்பாடுகள் போன்ற பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியிருந்தார்.

அவரது மீண்டும் தெரிவு, கல்முனை சட்டத்தரணிகள் மத்தியில் அவருக்கு உள்ள நம்பிக்கையையும் மதிப்பையும் வெளிப்படுத்துவதாக சங்க உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

புதிய நிர்வாக சபை விரைவில் தனது பணிகளைத் தொடங்கவுள்ளது என்றும், சட்டத்துறையின் மேம்பாடு மற்றும் நீதித்துறையுடன் இணைந்த ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய சங்கத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் மேலும், இவ்வருட செயலாளராக சட்டத்தரணி ஏ.ஜி. பிரேம் நவாத் அவர்களும் பொருளாளராக சீ.ஐ. சஞ்சித் அஹமட் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours