நூருல் ஹுதா உமர்

பெரும் போக வேளாண்மை அறுவடைக் காலத்தை முன்னிட்டு, யானைகளின் அச்சுறுத்தல் காணப்படும் பகுதிகளை அடையாளம் கண்டு அவற்றில் மின் குமிழ்கள் பொருத்தும் வேலைத்திட்டம் சம்மாந்துறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அமீர் அப்னான் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிரின் வழிகாட்டுதலின் கீழ் மத்திய வட்டாரப் பகுதியில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இரவு நேரங்களில் யானைகள் நுழைவு அதிகரிக்கும் பகுதிகளாகக் கருதப்படும் பகுதியில் ஒளியமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதுகாப்பாக இயங்கிடும் வகையில், இரவு நேர பார்வை தெளிவை அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இவ்வேலைத்திட்டத்தில் கெளரவ பிரதேச சபை உறுப்பினர்களான ஆஷிக் அஹமட் மற்றும் பெளமி சுலைமான் ஆகியோரும் கலந்து கொண்டு பணிகளை பார்வையிட்டனர். யானை அச்சுறுத்தலைக் குறைக்கும் நோக்கில் தொடர்ந்தும் இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிரதேச சபை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours