மட்டக்களப்பு  மாவட்டம்  போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பாலையடிவட்டாரக் கிராமங்களில் நிலவி வரும் காட்டு யானைகளின் அச்சுறுத்தலில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கில், வீதி விளக்குகளைச் சீரமைக்கும் விசேட செயற்திட்டம் இன்று (27.02.2026) முன்னெடுக்கப்பட்டது.

பாலையடிவட்டை, வட்டார கிராமங்களில் இரவு வேளைகளில் காட்டு யானைகளின் ஊடுருவல் அதிகரித்துள்ளதால் மக்கள் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வந்தனர்.

இதனைக்கருத்திற் கொண்டு, மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் போரதீவுப்பற்று பிரதேச சபையின் உபதவிசாளர் த.கயசீலன் அவர்கள் தனது சொந்த நிதியில் புதிய மின்குமிழ்களைக் கொள்வனவு செய்தார். இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட மின்குமிழ்கள்  கிராமங்களின் கிராம அபிவிருத்திச் சங்க நிர்வாகிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.

​போரதீவுப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் வி.மதிமேனன் அவர்களின் முறையான அனுமதியுடன், சபையின் ஊழியர்களினால் இன்று பின்வரும் கிராமங்களில் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

பாலையடிவட்டை , நெல்லிக்காடு ,37ஆம் கிராமம் ,35ஆம் கிராமம்  விளாந்தோட்டம் ஆகிய கிராமங்களில்  நீண்டகாலமாகப் பழுதடைந்து காணப்பட்ட மின்குமிழ்கள் அகற்றப்பட்டு புதிய மின்குமிழ்கள் மாற்றப்பட்டன. 

அத்துடன், செயலிழந்திருந்த தெருவிளக்குகள் அனைத்தும் ஊழியர்களினால் முழுமையாகத் திருத்தியமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.

காட்டு யானைகளின் அச்சுறுத்தல் காரணமாக இரவு வேளைகளில் நடமாட அஞ்சிய மக்களுக்கு, உபதவிசாளரின் இந்த மனிதாபிமான அடிப்படையிலான உடனடி நடவடிக்கை பெரும் நிம்மதியை அளித்துள்ளது.




(ரஞ்சன்)

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours