(ரஞ்சன்)

மட்டக்களப்பு மாவட்டம், பட்டிருப்பு வலயத்திற்குட்பட்ட பழுகாமம் கண்டுமணி மகாவித்தியாலயத்தில் இன்று (04.02.2026) ஆம் திகதி  மிகப்பாரிய அளவில் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

பாடசாலை வளாகத்தை மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளுக்கு ஏதுவாகத் தூய்மைப்படுத்தித் தருமாறு, பாடசாலை அதிபர் திரு. கி. கிருஷ்ணதாசன் அவர்கள் ஊரிலுள்ள விளையாட்டுக்கழகங்கள் மற்றும் பழைய மாணவர் சங்கத்திடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதிபரினது வேண்டுகோளை ஏற்று, பழுகாமத்தைச் சேர்ந்த

​விளையாட்டுக் கழகங்களின் உறுப்பினர்கள்

​பழைய மாணவர் சங்கத்தினர்

​அனைவரும் ஒன்றிணைந்து பாடசாலை வளாகத்தைச் சிரமதான பணியினனை மிகவும் ஆர்வத்துடன் செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.














Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours