( வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவு
விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் (2025)2026ம் ஆண்டு க.பொ .த சாதாரண தர
பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிப்பதற்காக
மூன்று நாள்முன்னோடி கல்விக்கருத்தரங்கு (01) ஞாயிற்றுக்கிழமை
தைப்பூசத்தில் காரைதீவில் ஆரம்பமானது.
அதன் அங்குரார்ப்பண வைபவம் கழகத் தலைவர் வை.கோபிகாந் தலைமையில், கழக தலைமையகத்தில் நடைபெற்றது .
கழக
போசகர்களான, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன், ஓய்வு
நிலை உதவி கல்விப் பணிப்பாளர் விபுலமாமணி விரி. சகாதேவராஜா ஆகியோர்
அதிதிகளாக கலந்து கொண்டு உரையாற்றி ஆரம்பித்து வைத்தார்கள்.
150
க்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டார்கள். விஞ்ஞான பாட வளவாளராக ஓய்வு
நிலை ஆசிரிய ஆலோசகர் எம்.எஸ். எஸ்.அமீன் கலந்து கொண்டார்.





Post A Comment:
0 comments so far,add yours