( (கனகராசா சரவணன்)
இந்த
நாட்டை பிரித்தானியர்கள் சிங்களவர்களிடம் கையளித்ததில் இருந்து
தொடர்ச்சியாக தமிழர்கள் இந்த நாளை கரிநாளாக அனுஷ்டித்து வருகின்றனர். எனவே
நாளை பல்கலைக்கழக மாணவர்கள் காணாமல் போன உறவுகள் , மற்றும் பொது
அமைப்புக்கள் முன்னெடுத்து வரும் இந்த கரிநாள் போராட்டத்திற்கு மக்கள்
வலுச்சேர்க்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய
அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு
வொய்ஸ் ஒப் மீடியா கற்கை நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (03)
இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த
நாட்டிலே தமிழர் தாயகம் எங்கும் இந்த நாளை ஒரு கரிநாளாக பிரகடனப்படுத்தி பல
போராட்டங்கள் நடைபெறவுள்ளது அதனடிப்படையில் வடக்கில் கிளிநொச்சியிலும்
கிழக்கில் மட்டக்களப்பிலும் கரிநாள் எதிர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளது
பிரித்தானியர்கள்
1948 பெப்பிரவரி 4ம் திகதி இந்த நாட்டை ஒரு சிங்கள தேசிய வாதத்திடம்
கையளித்ததில் இருந்து தமிழர்களை பொறுத்தமட்டில் இந்த நாளை
தொடர்ச்சியாக ஒரு கரிநாளாக அனுஷ்டித்து வருகின்றனர்.
பல்லின
மக்கள் வாழுகின்ற சூழ்நிலையில் நாட்டினுடைய சிங்கள தேசியவாதிகளான
ஆட்சியாளர்கள் பிரித்தானியர்கள் கையளித்தில் இருந்து ஏனைய மக்களை அடக்கி
ஒடுக்கி அடிமைப்படுத்தி வருகின்ற நிலமையினால் இந்த நாளை சிறுபான்மை மக்கள்
கரிநாளாக அனுஷ்டிக்கின்றனர்
இந்த நாடு தெற்கு ஆசிய
பிராந்தியத்தில் ஒரு முன்னிலையாக வரவேண்டிய நாடு துரதிர்ஷ்டவசமாக இந்த
சிங்கள தேசிய ஆட்சியாளர்கள் தங்களுடைய நலனுக்காக முன்னிலைப்படுத்தி கொண்டு
செல்வதால் இந்த நாடு வளர்ச்சி பாதையில் இருந்து பின்தங்கிய நிலையில்
காணப்படுகின்றது.
தமிழர்கள் அடிமைப்படுத்தப்பட்டு வருகின்ற
இந்த நிலைமையிலே பெரும்பான்மையாக இருக்கும் சிங்கள மக்கள் இந்த நாளை
சுதந்திர நாளாக கருதி அவர்கள் கொண்டாடினாலும் அந்த மக்கள் இந்த நாளை
கரிநாளாக அனுஷ்டித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஏன் என்றால் இந்த
வளர்ச்சி பாதையை தடுப்பது சிங்கள தேசியவாதம் இந்த நாட்டின் அரசியல் அமைப்பு
1948 பிற்பாடு ஒரு ஒட்சியாட்சி அரசியல் அமைப்பாக ஒரு அடிமை சாசனமாக
இருப்பதால் இந்த அரசியல் அமைப்பில் உள்ள சட்டங்கள் ஒரு இனத்தை அடக்கி
ஒடுகின்றது அந்த அடக்குமுறை என்பது சிங்கள மக்களையும் முழுமையாக
பாதிக்கின்றது.
எனவே வடக்கு கிழக்கில் நடக்கும் கரிநாள் நிகழ்வு
சிங்கள மக்களுக்கு பொருத்தமாக அமைகிறது எனவே இந்த நிலைமைகளை சிங்கள தேசம்
விளங்கி கொண்டு அடிப்படை பிரச்சனைக்கு காரணமாக இருக்கின்ற ஒற்றையாட்சி
அரசியல் அமைப்பை மாற்றி அதனை ஒரு சமஷ்டி கட்டமைப்பாக மாற்றி இந்த நாட்டிலே
இருக்கின்ற பல்லின மக்கள் சம உரிமையுடன் சுயநிர்ணயத்துடன் அவர் அவர்
அனுபவிக்க கூடிய அந்த சட்டத்தை மாற்றுவதற்கு ஆட்சியாளர்கள் முன்வரவேண்டும்
அவ்வாறு
முன் வருகின்ற பட்சத்தில் மட்டும் தான் இந்த நாட்டை கட்டியொழுப்பலாம்
இங்கே அடிப்படை காரணமாக இருப்பது இந்த அடிமை சாசனம் தமிழர்கள் தான்
நசுக்கப்படுகிறார்கள் என்ற மமதையில் இந்த ஆட்சியாளர்கள் இருப்பார்களாக
இருந்தால் இந்த நாடு மீண்டும்; ஒரு படுகுழியில் தள்ளப்படும் ஆகவே இந்த
நிலைமைகளை ஆட்சியாளர்கள் உணரவேண்டும்.
1949 கல்லோயா திட்டம்
தொடக்கம் 2009 கிபிலோயா திட்டம் வரைக்கும் தமிழ் மக்களுடைய தேசம்
குறிவைக்கப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டு அந்த தேசம் அழிக்கப்படுகின்றது
ஒற்றையாட்சி கட்டமைப்பு தான் தமிழ் தேசத்தை அழிக்கின்றது எனவே இந்த
கட்டமைப்பை மாற்றுவதற்கு ஆட்சியாளர்கள் முன்வரவேண்டும் சர்வதேச நாடுகளும்
அழுத்தம் கொடுக்க வேண்டும்
பெரும்பான்மையினரான சிங்களவர்களிடம்
இந்த நாட்டை பிரித்தானியர் கையளித்ததில் இருந்து தொடர்ச்சியாக தமிழர்கள்
இந்த நாளை கரிநாளாக அனுஷ்டித்து வருகின்றனர் அதன் அடிப்படையில் வடக்கிலும்
கிழக்கிலும் கரிநாள் அனுஷ்டிக்கப்படுகின்றது வடக்கில் பல வர்த்தக
அமைப்புகள் பொது அமைப்புகள் முழுமையான ஆதரவு வழங்குவதாக கூறியுள்ளனர்
அதேபோல்
கிழக்கில் உள்ள வர்த்தக நிலையங்கள் பொது அமைப்புக்கள் மக்கள் இந்த
போராட்டத்துக்கு முழுமையாக ஒத்துழைத்து வடக்கில் யாழ் பல்கலைக்களகம்
கிழக்கில் வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகம் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள்
முன்னெடுத்து வரும் இந்த போராட்டத்திற்கு அனைவரும் சேர்ந்து வலுச்சேர்க்க
வேண்டும் என்றார். ;
Post A Comment:
0 comments so far,add yours