வள்ளுவம் அமைப்பின்  ஈராண்டு தொடக்கவிழாவை முன்னுட்டு பல நலன்விரும்பிகளினதும், வள்ளுவம் அங்கத்துவரினதும் நிதி பங்களிப்புடன் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட  மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்விற்கு வதிவிட பொறியலாளர் த. அமிர்தலிங்கம் சது /வேப்பையடி கலைமகள்  மகா வித்தியாலய அதிபர் க. தியாகராஜா, ஆசிரியர் செ. திவாகரன் (கமு/பாண்டிருப்பு மகா வித்தியாலய பிரதி அதிபர் திருமதி. நிலந்தினி ரவிச்சந்திரன், உதவி பொறியியலாளர்  ச. குமணரோஜன் ஆகியோர் அதிதிகளாக  கலந்து சிறப்பித்தனர்.

2024/ 2025  உயர்தரம் கற்ற மாணவர்களினால் வள்ளுவம் அமைப்பு உருவாக்கப்பட்டு பொருளாதார ரீதியாக சிக்கலுறும் மாணவர்களுக்கு  கல்வி உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours