இலங்கை மருத்துவச் சங்கத்தின் உயரிய அங்கீகாரத்தைப் பெற்றார் மருத்துவர் கிருஷாந்த்.முன்னாள் அதிபர் பொன்னம்பலம் கந்தையா அவர்களின் மூத்த மகனான, பிராந்திய அபிவிருத்தி வங்கியின் மாவட்ட முகாமையாளர் கந்தையா சத்தியநாதன் மற்றும்  SEVO நிறுவனத்தின் தலைவியுமான கிரிஜாதேவி தம்பதியரின் சிரேஷ்ட புதல்வருமான மருத்துவர் சத்தியநாதன் கிருஷாந்த், இலங்கை மருத்துவச் சங்கத்தால் நடத்தப்பட்ட MD surgery முதுகலைச் சத்திரச் சிகிச்சைத் பரீட்சையில், அகில இலங்கைச் சிறந்த 14 மாணவர்களில் ஒருவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தனது சகோதரி மற்றும் சகோதரனுடன் குடும்பத்தின் பெருமையை நிலைநிறுத்தியுள்ள கிருஷாந்தின் சாதனையை, சமூகத்தின் பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இவரது சகோதரி, கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி என்பதும், சகோதரர் ஒரு பொறியியலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours