பதுளை வலயக்கல்வி ஹாலி எல கோட்டக்கல்வி பணிமனையின் ஒழுங்கமைப்பிலும் சுவிஸ் உதயம் அமைப்பின் அனுசரணையில் பொங்கல் விழா மிகவும் சிறப்பான முறையில் ஹாலி எல கோட்டக்கல்வி பணிப்பாளர் யூ.கே.லக்மினி குணசேன தலைமையில் ஹாலி எல கோட்டக்கல்வி அலுவலகத்தில் திங்கட்கிழமை இடம்பெற்றது.
இப் பொங்கல் விழாவிற்கான பரிசுப்பொருட்களை கொள்வனவு செய்து தருமாறு ஆசிரிய ஆலோசகர் இந்திராணி அவர்களது கோரிக்கைக்கு இணங்க 50 மாணவர்களுக்கான புத்தகப்பைகள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் உதவிக் கல்விப்பணிப்பாளர்கள் ஆசிரிய ஆலாசகர்கள் காரியாலய உத்தியோகத்தர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்
இவ் உதவியினை வழங்கிய சுவிஸ் உதயம் அமைபின் தாய்ச்சங்கம் மற்றும் கிழக்குமாகாணக்கிளை நிருவாகத்திற்கு நன்றியினைத் தெரிவித்துள்ளனர்.














Post A Comment:
0 comments so far,add yours