(ஆ.நிதாகரன்) 
சமகால ஈழத்தமிழர்களின் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு ஒற்றுமையாக அரசியல் தீர்வு ஆவணங்களை தயாரிக்கும் விடயத்திலாவது ஒன்று படவேண்டும் அப்படி ஒன்றுபட்டு அனைவருடைய ஏகோபித்த கோரிக்கை இதுதான் என்பதை தமிழ்தேசிய கட்சிகள் சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கவேண்டும் அதற்கு தமிழ் சட்டத்தரணிகளுடைய பங்களிப்பு தேவை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்பொதுவேட்பாளராக போட்டியிட்டவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார். சமீப காலமாக தமிழ்தேசிய கட்சிகள், தனித்தனியாக அரசியல் தீர்வு ஆவணங்களையும், பொது அமைப்பு தனியான ஆவணங்களையும்,தயாரிப்பதும், அதுதொடர்பான கருத்தரங்குகளை மாவட்ட ரீதியாக நடத்தி வருவதையும் வடகிழக்கில் காணமுடிகிறது. இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி ஒரு சாரார் கடந்த 2015, நல்லாட்சிகாலத்தில் தயாரித்து காணாமல் ஆக்கப்பட்ட “ஏக்கியராச்சிய” வரவை மீண்டும் தூசிதட்டி எடுப்பதற்கு ஆதரவாகவும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி முழுமையாக நல்லாட்சியால் தயாரித்த ஏக்கியரச்சிய வரவை அடியோடு நிராகரித்து “திம்பு கோட்பாடு” அடிப்படையிலான வரைவை தயாரிக்கவுள்ளதாவும், ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி குழப்பிய நிலைநிலையில் இலங்கைத்தமிழ் அரசுடன் இணைந்து வேறொரு தீர்வுத்திட்ட வரைவை தயாரிப்பதாகவும், திருகோணமலையில் கூடிய அரசியல் கட்சிகள் அல்லாத மத குரு மற்றும் சிவில் அமைப்பாக ஒரு சாரார் “திருகோணமலை பிரகடனம்” எனும்பெயரில் வெளியக சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தும் ஆவணமொன்றை தயாரித்துள்ளதாகவும். இப்படியான பல ஆவணத்தயாரிப்புக்கள் ஒருபுறமாக ஊடகங்களில் படங்களும் செய்திகளும் வரும் வேளையில் கடந்த 2026, மார்ச்,03, ல் கொழும்பில் கூடிய தமிழ் சட்டத்தரணிகள் “தமிழ் சட்டத்தரணிகள் பேரவை” தமிழ்த்தேசிய கட்சிகளை சேர்ந்த சிலரும் தமிழ் தேசிய கட்சிகளை ஒற்றிணைத்து அவர்களும் ஒரு கூட்டு முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்த அனைத்து விடயங்களும், கலந்துரையாடல்களும். கூட்டங்களும், ஊடக அறிக்கைகளும் ஈழத்தமிழர்களுக்காக, தமிழ் பேசும் மக்களுக்காக ஒரு அரசியல் தீர்வுக்காக அவர்கள் அனைவரும் ஆற்றும் பணிகள் என்பது உண்மைதான். முதலில் கடந்த 2015, ல் நல்லாட்சியில் தயாரித்த ஏக்கியராச்சியவரவை முழுமையாக நிராகரிக்கவேண்டும் என்ற கருத்தொருமைப்பாடு அனைத்து தரப்புகளும் ஏற்கவேண்டும், ஆனால் ஆவணங்கள் ஒவ்வொரு தரப்பும் ஒவ்வொருவிதமாக தயாரித்து இதுதான் நல்லது, இதுதான் சரியானது என அந்தந்த தரப்புகள் ஒரு தரப்பின் ஆவணத்தை இன்னொரு தரப்பு குறை கூறுவதும், அதில் இது இல்லை, இதில் அது இல்லை, அந்த சொல்லில் இந்த விடயம் இல்லை என கூறி காலத்தை கடத்துவதையே கடந்த 17, வருடங்களாக காணமுடிகிறது. இறுதியாக தமிழ் சட்டத்தரணிகள் எடுத்த முயற்சியில் தமிழ்தேசிய கட்சிகளை அழைத்து கலந்துரையாடியதைப்போன்று தமிழ் சட்டத்தரணிகள் தலைமையில் இப்போதைக்கு அவசரமாக செய்ய வேண்டியது தாங்கள் தாங்கள் விரும்பியபடி தயாரித்த அல்லது தயாரிக்கவுள்ள தமிழ்தேசிய கட்சிகள், சிவில் அமைப்பு பிரதிநிதிகள், ஆயர்கள், மதகுருமார்கள், அனைவரையும் அவர்களிடம் உள்ள அனைத்து ஆவணங்களையும் தமிழ் சட்டத்தரணிகள் கையேற்று அவர்களையும் அழைத்து ஒவ்வொரு ஆவணங்களில் உள்ள விடயங்களை பரிசீலித்து எதனை சேர்க்கலாம் எதனை கழிக்கலாம் என்று ஆழ்ந்து அறிவார்க்கமாக சிந்தித்து இறுதிவரைவு ஈழத்தமிழர்களின் வரைவு இதுதான என எல்லோரினது சம்மதத்துடன் வெளியிடுவதுடன் அதனை சர்வதேசத்துக்கும், இலங்கை அரசுக்கும், இந்தியாவுக்கும் கையளிக்க கூடியதான ஒன்றுகூடலை தமிழ் சட்டத்தரணிகள் உடனே செய்யவேண்டும். இல்லை எனில் நல்லதொரு வாய்ப்பாக கடந்த 2024,செப்டம்பர்,21, ல் நடந்த ஜனாதிபதி பொதுத்தேர்தலில் அனைத்து தமிழ் கட்சிகளும் வேற்றுமை இன்றி தமிழ் பொதுவேட்பாளரான என்னை (பா.அரியநேத்திரன்) ஆதரித்திருப்பின் ஏறக்குறைய ஆறு இலட்சம் வாக்குகளை பெற்று வடகிழக்கு தமிழர்களின் பலத்தையும், அரசியல் தீர்வையும் நிருப்பித்திருக்கலாம். அதனை கெடுத்தவர்கள் இலங்கைத்தமிழ் அரசுக்கட்சியில் சுமந்திரன் குழுவும். தமிழ்தேசிய மக்கள் முன்னணியுமாகும், ஒருசாரார் எந்த அரசியல் பொது நன்மையும் இன்றி சஜீத்தை ஆதரித்து முகத்தில் கரி பூசினர், அடுத்தவர்கள் தேர்தலை பகிஷ்கரிக்குமாறு கோரி சேற்றில் விழுந்தனர். இருந்தபோதும் தமிழ் பொதுவேட்பாளரான எனக்கு 226343, வாக்குகள் கிடைத்தது பெரிய விடயம் இப்படியான தவறுகளை தமிழ்தேசிய கட்சிகள் விடாமல் கொள்கை ரீதியிலான ஒற்றுமையை வலியுறுத்த தமிழ் சட்டத்தரணிகளின் முயற்ச்சி இருக்கவேண்டும் எனவும் மேலும் கூறினார்.
Share To:

Post A Comment:

0 comments so far,add yours