நூருல் ஹுதா உமர்
இந்நிகழ்வில் ரமழானின் ஆன்மீகப் பெறுமதிகளையும் சமூக ஒற்றுமையின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைக்கும் வகையில் மருதமுனை தாரூல் ஹுதா மகளிர் அரபுக் கல்லூரி முதல்வர் அஸ்ஸெக் மௌலவி எம்.எல்.எம். முபாரக் (மதனி) அவர்களால் ரமழான் சிந்தனை நிகழ்த்தப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசார், கல்முனை வீதி அபிவிருத்தி அதிகாரசபை நிறைவேற்று பொறியியலாளர் இசட்.ஏ. அஜ்மீர், கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பல திணைக்களங்களின் தலைவர்கள், ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர்கள், இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள், கல்முனை கல்வி வலய பிரதிக் கல்வி பணிப்பாளர்கள், உதவிக்கல்வி பணிப்பாளர்கள், வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலை அதிபர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், பிரதேச முக்கியஸ்தர்கள், கல்விமான்கள் மற்றும் ஊர்ப்பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.






Post A Comment:
0 comments so far,add yours