அபு அலா 

புனித ரமழான் மாதத்தையொட்டி திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு ரமழான் நோன்பு கால உணவுப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு (04) திருகோணமலையில் இடம்பெற்றது.

தேசிய ஐக்கிய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளர் சிரேஷ்ட ஊடகவியலாளர் பைஷல் இஸ்மாயிலினால், பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்பிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக இந்த நோன்பு கால உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.


இப்பொதிகளை திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் முன்னாள் உதவித் தவிசாளர், இன்னாள் உறுப்பினருமாகிய ஏ.எல்.எம்.நெளபரினால் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours