(ரஞ்சன்)


மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட பாலையடி வட்டாரத்தைச் சேர்ந்த பல்வேறு கிராமங்களில் நிலவி வரும் காட்டு யானைகளின் அச்சுறுத்தலிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கோடும், அவர்களின் நலன் கருதியும் விசேட மின்விளக்குத் திருத்த வேலைத்திட்டம் கடந்த சனிக்கிழமை (14.03.2026) முன்னெடுக்கப்பட்டது.

பாலையடி வட்டாரத்திற்குட்பட்ட 35ஆம் கிராமம், சின்னவிளாந்தோட்டம், பாலையடிவட்டை, நெல்லிக்காடு வடுகனை மற்றும் 37ஆம் கிராமம் ஆகிய பகுதிகளில் இந்த மின்விளக்கு பொருத்தும் மற்றும் பராமரிப்புப் பணிகள் விரிவாக மேற்கொள்ளப்பட்டன.


பிரதேச சபையின் தவிசாளர்  வி. மதிமேனன் அவர்களின் விசேட அனுமதியுடன், உப தவிசாளர் த. கயசீலன் அவர்களின் நேரடி மேற்பார்வை மற்றும் விடாமுயற்சியின் கீழ் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

யானைகளின் நடமாட்டம் காரணமாக இரவு வேளைகளில் மக்கள் நடமாட அச்சப்படும் சூழல் நிலவி வந்ததைக் கருத்திற்கொண்டு, விடுமுறை நாளாக இருந்தபோதிலும் பிரதேச சபை ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் இப்பணியில் ஈடுபட்டனர்.

இதன் போதுபுதிய தெருவிளக்குகள் பொருத்தப்பட்டன.

​செயலிழந்திருந்த பழைய மின்குமிழ்கள் மாற்றப்பட்டன.

​மின் இணைப்புகளில் காணப்பட்ட கோளாறுகள் சீர்செய்யப்பட்டன.


​குறிப்பாக 35ஆம், 37ஆம் கிராமங்கள் மற்றும் வடுகனை போன்ற யானை ஊடுருவல் அதிகம் உள்ள பகுதிகளில் இவ்வாறான மின்விளக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டதன் மூலம், இனிவரும் காலங்களில் இரவு நேரப் பயணங்கள் பாதுகாப்பாக அமையும் என அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர்.

தவிசாளர், உப தவிசாளர் மற்றும் களத்தில் நின்று பணியாற்றிய ஊழியர்களுக்கும் மக்கள் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.








Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours