(ரஞ்சன்)

​மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவிஆணையாளர் அலுவலகத்தினால்  ஏற்பாடு செய்யப்பட்ட "உள்ளூராட்சி மன்றங்களின் சபை நடவடிக்கைகள்" தொடர்பான விசேட பயிற்சி நெறி இன்று (13.03.2026)ஆம் திகதி போரதீவுப்பற்று பிரதேசசபையின் வெல்லாவெளி  கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

இப்பயிற்சி நெறி, சபை நடவடிக்கைகளை முறையாகவும், சட்ட விதிகளுக்கு உட்பட்டும் முன்னெடுப்பதற்கான வழிகாட்டல்களை நோக்கமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டது.

உள்ளூராட்சி மன்றங்களின் பணிகளை மிகவும் வினைத்திறனாகவும், சட்ட விதிகளுக்கு அமைவாகவும் முன்னெடுப்பதையே இந்தப் பயிற்சி நெறி பிரதான இலக்காகக் கொண்டுள்ளது. 

இந்தப் பயிற்சி நெறியின் வளவாளர்களாக

​திரு. நடராசா  ஐங்கரன் – கிழக்கு மாகாண உள்ளூராட்சி உதவி ஆணையாளர்.மற்றும் 

​திரு. ரெட்ணகுமார் தயாகரன் – மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி  ஆணையாளர்  அலுவலகத்தின்  ஆய்வு உத்தியோகஸ்தர்.

​ஆகியோர் கலந்துகொண்டு, சபை அமர்வுகளின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த தீர்மானங்களை நிறைவேற்றும் போது கவனிக்க வேண்டிய சட்ட ரீதியான விடயங்கள் குறித்து விரிவான விளக்கங்களை வழங்கினர்.

இன்று காலை 8:30 மணிக்கு ஆரம்பமான இந்தப் பயிற்சி வகுப்புகள் மாலை 4:30 மணி வரை நடைபெறவுள்ளன.

உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகக் கட்டமைப்பு, சபை அமர்வுகளின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் மற்றும் மக்கள் நலன் சார்ந்த தீர்மானங்களை நிறைவேற்றும் போது கவனிக்க வேண்டிய சட்ட ரீதியான விடயங்கள் குறித்து இதன்போது விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் வி.மதிமேனன்,உபதவிசாளர் த.கயசீலன்,பிரதேசசபையின் செயலாளர் எஸ்.பகீரதன் ,பிரதேசசபை  உறுப்பினர்கள்,உத்தியோகஸ்தர்கள், என  பலரும் கலந்துகொண்டு தமது ஆலோசனைகளையும் சந்தேகங்களையும் முன்வைத்தனர்.

இப்பயிற்சி நெறியானது உள்ளூர் நிர்வாகத்தை மேலும் பலப்படுத்துவதோடு, மக்களுக்கு வினைத்திறனான சேவைகளை வழங்க வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.










Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours