(  வி.ரி.சகாதேவராஜா)

கல்முனை மாநகர்  வளர் கெளரி அம்பிகை உடனுறை சந்தான ஈஸ்வரர் தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவ கொடியேற்றத் திருவிழா இன்று (22) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

பிரமோற்சவ பிரதம குரு சிவஸ்ரீ சி. கிருபாகர குருக்கள் தலைமையில் ஆலய குரு சிவஸ்ரீ ராமச்சந்திர தவசீலக் குருக்கள் சகிதம் இன்று கொடியேற்றம் இடம்பெற்றுள்ளது.



திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழா 01.04.2026 (புதன்கிழமை) அன்று அதிகாலை முதல் நடைபெறவுள்ளது.
 அடுத்ததாக, தீர்த்த உற்சவம் 02.04.2026 (வியாழக்கிழமை) அன்று நடைபெற்று மஹோற்சவம் நிறைவுறும் என ஆலயத் தலைவர் பிரபல தமிழாசான் வே.செவ்வேட்குமரன் தெரிவித்தார்.

தொடர்ந்து பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளும், பூஜைகளும், பக்தி நிகழ்வுகளும் தினந்தோறும் நடைபெறும்.

உற்சவ காலங்களில் தினமும் அன்னதானம் இடம் பெறவுள்ளது. 



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours