பிரித்தானியா உதவும் கரங்கள் அமைப்பின் நிதி அனுசரணையில்  அம்பாறை மாவட்ட விபுலானந்தாப் புனர்வாழ்வுக்கழகத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான ஊக்குவிப்புப் பணம் வழங்கும் நிகழ்வு சேனைக்குடியிருப்பு தமிழ்வாணன் மண்டபத்தில் அம்பாறை மாவட்ட விபுலானந்தாப் புனர்வாழ்வுக்கழகத்தின் தலைவர் கலாபூஷணம் கா. சந்திரலிங்கம் தலைமையில்  23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்றது.

இதன் போது பிரித்தானியா உதவும் கரங்கள் அமைப்பின் உறுப்பினர் ஏ.வசந்தகுமாரன் அம்பாறை மாவட்ட விபுலானந்தாப் புனர்வாழ்வுக்கழகத்தின் செயலாளர் ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் கண.வரதராஜன் உப தலைவர் ஓய்வுபெற்ற எந்திரி .எஸ்.சர்வானந்தன்  ; ஓய்வுபெற்ற உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.மாதவன்பிள்ளை சது/ வேப்பையடிகலைமகள் மகாவித்தியாலய அதிபர் கே.தியாகராஜா இலுப்பைக்குளம் சது /சரஸ்வதி வித்தியாலய அதிபர் வி.ரதிதேவன் சது /கணேசாவித்தியாலய அதிபர் கே.துரைலிங்கம் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.





















Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours