அக்கரைப்பற்று திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் இன்றைய தினம்  இடம் பெற்ற சேவை நலன் பாராட்டு விழாவானது  திருக்கோவில் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு. ஆர். உதயகுமார் அவர்களின் தலைமையில்  இடம்பெற்றது.

இந் நிகழ்வில் ஆலையடிவேம்பு கோட்டத்தில் உள்ள  பாடசாலையில் இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் அதிபர், இடமாற்றம் பெற்றுச் செல்லும் அதிபர்கள் மற்றும் கோட்டக்கல்வி பணிப்பாளர் ஆகியோரினை வாழ்த்தி அவர்களுக்கு வாழ்த்துப்பாவினை ஆலையடி வேம்பு அதிபர்கள் அங்கத்தின் ஏற்பாட்டில்  இன்று பொண்ணாடை போர்த்தி  கெளரவிக்கப்பட்டதுடன்   புதிதாக கடமை யேற்ற ஆலையடிவேம்பு கோட்டக்கல்விப் பணிப்பாளர் அவர்களை கெளரவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்நிகழ்வில்  ஆலையடி வேம்பு கோட்டக்  கல்விப் பணிப்பாளர், கோட்டத்தில் உள்ள பாடசாலைகளின் அதிபர்கள், பிரதி அதிபர்கள் கலந்து சிறப்பித்தனர்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours