காக்காச்சிவட்டை பாடசாலையில் ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்த  இணைந்த  கரங்கள் அமைப்பு...

கணிதம்  மேலதிக கற்றல் மற்றும்  தற்காலிக பரிகார கற்பித்தல் ஆகிய மூன்று பாடத்திற்க்கான ஆசிரியர்களை  நியமிக்கின்ற நிகழ்வு 20/03/2026 பட்டிருப்பு கல்வி வலயத்தின் உள்ள காக்காச்சிவட்டை  விஷ்னு  வித்தியாலயத்தின் அதிபர்.சுகிதரன் தலைமையில் இடம்பெற்றது.

 பாடசாலையில் பல  வருடங்களாக  தரம் 10,தரம் 11 இரு பிரிவுகளுக்குமான கணிதம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கு ஆசிரியர் பாற்றாக்குறை  நிலவிவருகின்றது.  இதனை  இணைந்த கரங்கள்  அமைப்பினரிடம் சென்ற சில மாத்தங்களுக்கு முன்  அதிபராகிய நான் கோரிக்கையினை முன்வைத்திருந்தேன் அதன்  வேண்டுகோளுக்கு இணங்க  இவ் மாணவர்களின் எதிர்கால கல்வியினை நோக்கமாகக் கொண்டு செயற்பட்டுவரும் இணைந்த கரங்கள் அமைப்பு அதனை நிவர்த்தி செய்வதற்கு முன் வந்திருக்கின்றது என பாடசாலையில் அதிபர்   தனது உரையின் பொது குறிப்பிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் இன்றைய தினம் மேலதிக கற்றல் பாடங்களை ஆரம்பித்து வைக்கின்ற அங்குராப்பணம் இன்று (20)  பாடசாலையின் மண்டபத்தில் இடம் பெற்றிருந்தது.  

இன்  நிகழ்வுக்கு பட்டிருப்பு  கல்வி வலயத்தின்  ஆசிரிய ஆலோசகர்கள்,

இணைந்த கரங்களோடு  பயணிக்கும் சம்மாந்துறை கல்வி வலய  வேப்பையடி கலைமகள் வித்தியாலய அதிபர்.திரு. க.தியாகராஜா   மற்றும்  பாடநெறியினை கற்பிக்கும் வளவாளர், இணைந்த கரங்கள் உறுப்பினர் காந்தன், சமூக ஆர்வலர்கள்,  பெற்றோர்கள், பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்ததுடன்  இச் செயத்திட்டத்தில் 50 மாணவர்கள்  பங்குபற்றுகின்றனர்.

இவ் மேலதிக  ஒரு பாட ஆசிரியருக்கு 12000/=மாதாந்தம் ரூபாய் இரு ஆசிரியர்களுக்கான  கொடுப்பணவையும் பாடசாலையின் முழுனேர பரிகார கற்றளுக்காக ரூபாய் 15000/=  வழங்குவதற்கு முன்வந்த இணைந்த கரங்கள் உறவுகளோடு இணைந்து பயணிக்கும் நண்பர்களான 

தர்சன் யோகராசா, திருபரந்தன் சங்கரப்பிள்ளை, ஜெயரூபன் ஜெயசீலன் ஆகியோர் மேலதிக  மூன்று பாடத்திற்குமான நிதியினை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours