இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (21.03.2026) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளது.
அதன்படி, ஆட்டோ டீசலின் விலை லீட்டருக்கு ரூ. 79 அதிகரித்து ரூ. 382 ஆகவும், சூப்பர் டீசலின் விலை லீட்டருக்கு ரூ. 90 அதிகரித்து ரூ. 443 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை லீட்டருக்கு ரூ. 81 அதிகரித்து ரூ. 398 ஆகவும், மண்ணெண்ணெயின் விலை லீட்டருக்கு ரூ. 60 அதிகரித்து ரூ. 255 ஆகவும், 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ. 90 அதிகரித்து ரூ. 455 ஆகவும் உயர்ந்துள்ளதாக மத்திய வர்த்தகக் குழு தெரிவித்துள்ளது.

Post A Comment:
0 comments so far,add yours