(வி. ரி. சகாதேவராஜா)


வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து கதிர்காமத்திற்கு செல்லும் புனித பாதயாத்திரை, பாதயாத்திரை குழுத் தலைவர் ஜெயா வேல்சாமி தலைமையில் எதிர்வரும் மே மாதம் 23 ஆம் திகதி தொடங்கவுள்ளது.


 வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காம கந்தன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழா உற்சவக்கொடியேற்றம் யூலை 14ஆம் திகதி நடைபெற்று, தொடர்ந்து 15 தினங்கள் திருவிழா இடம்பெற்று , யூலை 29 ஆம் திகதி மாணிக்க கங்கையில் தீர்த்தம் நடைபெறும் என்று பஞ்சாங்கம் கூறுகின்றது.

இலங்கையின் மிக நீண்ட இந்த பாதயாத்திரையில் கலந்து கொள்ள விரும்பும் அடியார்கள், ஜெயா வேல்சாமி என்பவரை 077-8386381 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலம் தொடர்புகொள்ளலாம்.

இதுவரை 95 பக்தர்கள் மாத்திரமே உறுதிப்படுத்தப்படுவர் என அவர் தெரிவித்தார்.

செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகும் இந்தப் பாதயாத்திரை வடக்கு கிழக்கு ஊவா மாகாணங்களினூடாக யாழ்ப்பாணம், ,கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை போன்ற 7 மாவட்டங்களைக் கடந்து செல்லவுள்ளது.

சுமார் 52 நாட்கள், 572 கிலோமீற்றர் தூரத்தை கொண்ட இந்தப் பயணம், இலங்கையின் மிக நீண்ட கதிர்காமப் பாதயாத்திரையாகக் கருதப்படுகின்றது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours