[5:15 PM, 4/1/2026] Rames Kallar: பெரிய கல்லாறு ஸ்ரீசர்வார்த்த சித்தி விநாயகர்  ஆலய உற்சவ திருவிழாவின் இறுதி நாளான புதன் கிழமை எம் பெருமான் சமூத்திர நீராடல் லுக்காக வீதி ஊர்வலம் வரும் நிகழ்வில்  " தடம் அறக்கட்டளை " நிறுவனத்தின் அணுசரனையில்   மாபெரும் தாகசாந்தி நிகழ்வு இடம் பெற உள்ளது.

[5:18 PM, 4/1/2026] Rames Kallar: தனது தாயின் நினைவாக அவுஸ்ரேலியா வாழ் எமது பெரியகல்லாற்று உறவான திருவாளர் இராசலிங்கம் - நிறஞ்சன்  என்பவர் " தடம் " எனும் அறகட்டளை நிறுவனத்தை ஸ்தாபித்து நீண்ட நாட்களாக சமூக பணியினை தனது சொந்த நிதியில் இலவசமாக செய்து வருகின்றார் .

தனது தடத்தின் ஊடாக ....

1. தனது பெரியகல்லாறு  கிராமத்தில் நீண்ட காலமாக மரணம் நிகளும் அனைத்து மரண வீடுகளுக்கும் அங்கு தேவையான குடிநீர் போத்தல்கள் அத்தோடு 5000/= உதவி தொகை அங்கு தேவப்படும் கொட்டகைகள் மற்றும் கதிரைகள்  என அனைத்தையும் இலவசமாக  வழங்கி வருகின்றார் .

2. ⁠வறுமை கேட்டில் உள்ள குறிப்பாக பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை இலவசமாக செய்து வருகின்றார் 

3. ⁠வறுமையான நோய்வாய் பட்ட உறவுகளுக்கு  சிகிச்சைக்கு உதவுவதோடு உதவி தொகையும் இவரால் வழங்கி வைக்க படுகின்றது. 

4. ⁠வறிய பாடசாலை மாணவர்களுக்கு வருடம் தோறும் தேவையான கற்றல் உபகரணங்களையும் சில தேவையுள்ள மாணவர்களுக்கு படிப்பிற்கான அனைத்து கொடுப்பனவுகளையும் தடம் அறக்கட்டளை மூலம் செய்து வருகின்றார் .

5. ⁠பிரபல்யமான ஆலய உட்சவங்களின் போது அங்கு கலந்து கொள்ளும் அனைத்து பக்த்தர்களுக்கும் தனது தடம் அமைப்பின் ஊடாக இலவசமா குடிநீர் போத்தங்களை வழங்கி வைத்து வருகின்றார் .

6. ⁠இவர் தனது " தடம் " அமைப்பின் ஊடாக  தனது கிராமம் மட்டுமன்றி அயல் கிராம மக்களுக்கும் இச் சேவைகளை பொது நலத்துடன்  பாரிய இச் சேவையை தனது சொந்த நிதியில் பிரதேசம் தாண்டி மாவட்ட ரீதியாக செய்து வருகின்றமை எமது பிரதேசத்திற்கு கிடைத்த ஒரு பொக்கிசமாகும். 







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours