(ரஞ்சன்)

கிழக்கு மாகாணத்தின் வரலாற்றுப் புகழ்பெற்ற மட்டக்களப்பு, திருப்பழுகாமம் அருள்மிகு ஸ்ரீ கௌரிஅம்பிகா சமேத கேதீஸ்வரர் (சிவன்) ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் 9-ஆம் நாள் திருவிழாவான முத்துச்சப்பிர திருவிழா இன்று (31.03.2026) மிகச் சிறப்பாக நடைபெற்றது.கடந்த 23-ஆம் திகதி திங்கட்கிழமை ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ தெ.கு.ஜனேந்திரராசா குருக்கள் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமான இந்த மஹோற்சவம், பத்து நாட்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

9-ஆம் நாளான இன்று(31.03.2026) மாலை, ஏரிக்கரை பிள்ளையார் ஆலயத்தில் இருந்து முத்துச்சப்பிரம் எருது வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா ஆரம்பமானது.

பல்வேறு கலை நிகழ்வுகள் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க, பக்திப் பரவசத்துடன் வீதி உலா வந்த முத்துச்சப்பிரம் பின்னர் ஆலயத்தை வந்தடைந்தது. 

இதில் திருப்பழுகாமம் மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நாளை (01.04.2026) புதன்கிழமை அன்று சமுத்திர தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது.

இத்துடன் இந்த ஆண்டிற்கான வருடாந்த மஹோற்சவ பெருவிழா இனிதே நிறைவுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தத் திருவிழாவிற்கான அனைத்து பாதுகாப்பு மற்றும் சுகாதார ஏற்பாடுகளையும், போக்குவரத்து ஒழுங்குகளையும் ஆலய நிருவாகத்தினர் சிறப்பாக மேற்கொண்டிருந்தனர்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours