(வி.ரி.சகாதேவராஜா)

உயிர்த்த ஞாயிறு ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் உயிர் நீத்த உறவுகளுக்கான 07வது ஆண்டினை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தும்  நிகழ்வானது நேற்று ( 21)மாலை கல்முனையில் உணர்வு பூர்வமாக நடைபெற்றது.

குறிப்பாக மட்டக்களப்பில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத்தாக்குதலில் உயிர் நீத்த உறவுகளுக்கான நினைவேந்தல், கல்முனையில் உள்ள உறவினர்களின் ஏற்பாட்டில் கல்முனையில்  இராம கிருஷ்ண மகா வித்தியாலயம் அருகாமையில் இடம் பெற்றது.

உயிர் நீத்த உறவுகளுக்காக அகல் விளக்கு ஏற்றி அஞ்சலி இடம்பெற்றது.

அனைவரும் சோகநிலையில் காணப்பட்டார்கள்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours