க.விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு
மாவட்டத்தில் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை
கிராமத்திற்கு செல்லும் பொது இடங்கள் மற்றும் சாலை ஓரங்களில் (குறிப்பாக
காளிகோயில் வீதி, அரசடிப் பகுதி போன்ற இடங்களில்) ஊசிகள் (Syringe), செலைன்
குழாய்கள் மற்றும் இதர மருத்துவக் கழிவுகள் வீசப்பட்டிருப்பது
கண்டறியப்பட்டுள்ளது.
இதனை
சில சந்தேகநபர்கள் வீசியுள்ளார்கள்.இதனை பொதுமக்களின் சுகாதார நன்மை கருதி
தவிர்க்க வேண்டுமென துறைநீலாவணை புத்திஜீவிகள்,பொது அமைப்புக்கள் கோரிக்கை
முன்வைக்கின்றார்கள்.
இந்த ஊசிகள் கிருமி நீக்கம்
செய்யப்படாமல் வீசப்படுவதால், இதில் உள்ள கிருமிகள் மற்றவர்களுக்குப்
பரவும் அபாயம் உள்ளது.விவசாய வேலைக்குச் செல்பவர்கள் மற்றும் விளையாடும்
சிறுவர்கள் தெரியாமல் மிதித்தால் பெரும் காயங்களுக்கும் நோய்த்தொற்றுக்கும்
ஆளாக நேரிடும்.இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும். இவை பல ஆண்டுகள்
ஆனாலும் உக்காதவை; மண்ணிற்கும் மக்களுக்கும் கேடு விளைவிப்பவையாக
காணப்படுகின்றது.
வீடுகளில் சிகிச்சை பெறுபவர்கள்
அல்லது தனியார் மருத்துவ நிலையங்கள்,உங்கள் மருத்துவக் கழிவுகளை முறையான
விதிமுறைகளைப் பின்பற்றி அப்புறப்படுத்துங்கள்.இதனை 1000 டிகிரி
செல்சியஸுக்கும் அதிகமான வெப்பத்தில் எரிக்கப்பட வேண்டிய இத்தகைய
கழிவுகளைப்பொருட்களை பொது இடங்களில் வீசுவது சட்டப்படி குற்றமாகும் மற்றும்
மனிதாபிமானமற்ற செயலாகும்.
நமது
ஊரையும், நமது மக்களையும் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை. இனிவரும்
காலங்களில் இத்தகைய செயல்களைத் தவிர்க்குமாறு துறைநீலாவணை பொது
அமைப்புக்கள் கோரிக்கை முன்வைக்கின்றார்கள்.

Post A Comment:
0 comments so far,add yours