க. விஜயரெத்தினம்)


மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் அதிபர் இராசதுரை பாஸ்கர் அவர்கள் ஓய்வு பெறுவதையிட்டு பாடசாலை சமூகத்தினரால் சிறப்பாக பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.

மட்டக்களப்பு நகரிலும் சர்வதேச மட்டத்திலும் புகழ்பெற்ற பல சிறந்த ஆளுமைகளையும் புத்திஜீவிகளையும் உருவாக்கிய கல்வி நிலையமாக திகழும் இக்கல்லூரியின் பழைய மாணவராகவும், முன்னாள் கணித ஆசிரியராகவும், உப அதிபராகவும், பின்னர் அதிபராகவும் பணியாற்றிய இராசதுரை பாஸ்கர் அவர்கள் சிறந்த தலைமைத்துவத்துடன் பல மாணவர்களின் எதிர்காலத்தை வடிவமைத்தவர் ஆவார்.

தனது 58ஆவது வயதில்அண்மையில்  ஓய்வு  பெற்றார்.
 இவரை  பாடசாலை சமூகம், பாடசாலை அபிவிருத்திச்சங்கம், பழைய மாணவர் சங்கம், ஆசிரியர்கள், கல்விச்சாரா ஊழியர்கள் ஆகியோர் இணைந்து சிறப்பான கௌரவ நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிகழ்வின் போது, பேண்ட் வாத்திய இசையுடன் அதிபர் பாடசாலைக்கு அழைத்து வரப்பட்டதுடன், அவருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டதோடு நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திச்சங்க செயலாளர் எந்திரி உ. மயூரன், பழைய மாணவர் சங்கத் தலைவர் எந்திரி வை. கோபிநாத், அபிவிருத்திச்சங்க உறுப்பினர் எஸ். சசிகரன் உள்ளிட்டோர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டனர்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours