எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தை  ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க   தலைமையில் நடாத்துவதற்கு  எதிர்பார்க்கப்படுவதாக  மட்டக்களப்பு மாவட்ட அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ்  தெரிவித்தார்.

இதன் போது எதிர்வரும் மே மாதம் ஜனாதிபதி  மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு மாவட்டத்தின் அபிவிருத்தி செயற்திட்டங்கள் மற்றும்  நீண்டகாலமாக தீர்க்கப்படாத பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடி தீர்வுளை வழங்கவுள்ளார்.

ஜனாதிபதி வருகையின் போது கலந்துரையாட வேண்டிய விடயங்களை அடையாளம்  காண்பது தொடர்பான  முன்னாயத்தங்களை துறைசார் அதிகாரிகளுடன் கடந்த இரண்டு வாரங்களாக அரசாங்க அதிபர் மேற்கொண்டு வருகின்றார்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours