( வி.ரி.சகாதேவராஜா)


அம்பாறை மாவட்டத்தில் நிலவும் அதிக உஷ்ணம் மற்றும் கொளுத்தும் வெயில் காரணமாக  மக்களின் இயல்பு வாழ்க்கை  பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது விவசாய நடவடிக்கைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றது.

புத்தாண்டு வியாபாரமும் மந்தகதியில் நகருகிறது.

அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் அதிக வெப்பநிலை காரணமாக பொதுமக்கள் கால்நடையாக அல்லது துவிச்சக்கர வண்டிகளில் செல்வதை தவிர்த்து வாகனங்களில் பயணிப்பதை காண முடிகின்றது .

இதே வேளை விவசாய நடவடிக்கைகளின் போது பயன் தரும் மா மரம் மற்றும் தென்னை வெற்றிலை செய்கை இலைக்கறி வகைகள் போன்றவற்றிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் கால்நடைகளுக்கு வேண்டிய புற் தரைகளும்  தற்போது  கருகி வருகின்றது.
இருப்பினும் காட்டு யானைகள் மட்டும் பந்தி பந்தியாக வருகின்றது.

தென்னை மரம் தொடக்கம் பல மரங்கள்  தற்போது கருகி ஆரம்பிப்பதை  காண முடிகின்றது.

 இதேவேளை பொதுமக்கள் நீர்நிலைகளையும் மற்றும் நிழல் பகுதிகளையும் அதிகம் நாடி வருகிறார்கள்.
வீதியோரத்தில் இளநீர் சர்பத்  பழ வியாபாரம் களைகட்டி வருகிறது. விலைகளும் எகிறி வருகிறது.

தொடர்ச்சியான வெப்பநிலை காரணமாக சிறியவர்கள் வயோதிபர்கள் பல வித நோய்களால் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.

 நண்பகல்  வேளைகளில் நகரின் முக்கியமான பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours