(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
மாளிகைக்காடு மையவாடி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் அண்மைக் காலமாக தீவிரமடைந்துவரும் கடலரிப்பு அபாயத்தை தடுக்கும் பொருட்டு, கடலரிப்பைத் தடுப்பதற்கான 'கல்வேலி' (Revetment) பாதுகாப்புச் செயற்றிட்டம் (23) நேற்று உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியின் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் ஏ.பர்ஹான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சமூக வலுவூட்டல் மற்றும் கிராமிய அபிவிருத்தி பிரதியமைச்சர் வசந்த பியதிஸ்ஸ மற்றும் அரசியலமைப்புப் பேரவை உறுப்பினரும், அம்பாரை மாவட்ட கரையோரப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா ஆகியோர் கலந்து கொண்டு இப்பணியை ஆரம்பித்து வைத்தனர்.
கடலரிப்பால் பாதிக்கப்பட்டுவரும் மாளிகைக்காடு மையவாடியின் கடலரிப்பைத் தடுப்பதற்காக நிரந்தர 'கல்வேலி' அமைக்கும் இவ்வேலைத்திட்டத்திற்காக சுமார் 20 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.




Post A Comment:
0 comments so far,add yours