பல்கலைக்கழக சேவையாளர்கள் நலன்புரி சங்கத்தின் (MUSWA) இரண்டாவது வருடாந்த பொதுக்கூட்டம் 2026 ஏப்ரல் 12 அன்று மருதமுனை Green Leaf Restaurent யில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. "நலனில் வேரூன்றி ஒன்றாய் வளர்வோம்" எனும் மகுடவாக்கியத்திற்கேற்ப, இவ்வமைப்பு கடந்த ஓராண்டில் எய்திய நிருவாக மைல்கற்களையும் சமூகப் பணிகளையும் இவ்வரங்கில் சமர்ப்பித்தது.

கூட்டத்தின் தலைமையுரையை ஆற்றிய தலைவர் ஏ.எம். றியாஸ் அஹமட், பல்கலைக்கழக சமூகத்தினரிடையே ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை உருவாக்கும் நோக்கோடே இவ்வமைப்பு தோற்றம் பெற்றதாகக் குறிப்பிட்டார். ஒரு குறுகிய காலப்பகுதிக்குள் சங்கத்திற்கான யாப்பு உருவாக்கப்பட்டு, உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்டதுடன், வங்கி கணக்கும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

"முஸ்வா அமைப்பானது சமூக மாற்றத்திற்கான வினையூக்கியாகவும், கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான ஒரு பாலமாகவும் செயல்படும்" என தலைவர் தனது உரையில் வலியுறுத்தினார்.

MUSWA அமைப்பின் துணை விதிகளின்படி, செயற்குழுவின் பதவிக்காலம் இரண்டு (02) ஆண்டுகள் ஆகும். இதற்கமைய, இந்த வருடாந்த பொதுக்கூட்டத்தில் புதிய நிருவாகத் தெரிவு இடம்பெறவில்லை. தற்போதுள்ள நிருவாகக் குழுவே எதிர்வரும் காலத்திற்கும் தொடர்ந்து செயற்படும் என அறிவிக்கப்பட்டது.

நிருவாகக் குழுவாக பின்வருவோர் தொடருகிறார்கள்:

01. தலைவர்: A.M. றியாஸ் அகமட்

02. பொதுச் செயலாளர்: நாபி M. முஸ்னி

03. பொருளாளர்: A.S. ஹாபி

04. உப தலைவர்: கலாநிதி (திருமதி) M.M. மஷ்ரூபா

05. உப செயலாளர்: M.S. சுஹைல் ரஸீத்

06. கணக்காய்வாளர்: திருமதி M.F. ஷிபானா

07. நலன்புரி செயலாளர்: ஜனாப். S. ரம்ஸீன்

08. ஊடகச் செயலாளர்: ஜனாப். M.H. அல்-இஹ்ஷான்

செயற்குழு உறுப்பினர்கள் (பிரதிநிதிகள்): 

09. பேராசிரியர் கலாநிதி A.M.M. நவாஸ், 

10. A.R.M. சுல்பி (சட்டத்தரணி),  

11. M.L. அபூதாஹிர்,  

12. M.A.M. அஷ்ரப் மற்றும் 

13. A.A.M. சுஹைல்














Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours