(கனகராசா சரவணன்)



மட்டக்களப்பு மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த 29 வயது இளைஞன் ஒருவரை பொலிசார் நேற்று செவ்வாய்க்கிழமை (05)  கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.


மாவட்டத்தில் உள்ள ஒரு பிரதேசத்தில் குறித்த சிறுமியை 29 வயதுடைய ஆண் ஒருவர் காதலிப்பதாக கூறி அவரை வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த கதியை தெரியபடுத்தியமையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.


இதனையடுத்து குறித்த நபரை கைது செய்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கைது செய்தவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த பொலிஸ் நிலைய பொலிசார் தெரிவித்தனர்

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours