( வி.ரி.சகாதேவராஜா)
2011
உயர்தர மாணவர்கள் மற்றும் டைனமிக் விளையாட்டுக்கழகமும் இணைந்து நடாத்திய
அமரர் சிவானந்தம் தர்மிகன் ஞாபகார்த்த கிண்ணம் Batch Battle League -2026
சுற்றுத் தொடரானது இம் முறை ஆறாவது வருடமாக,காரைதீவு விபுலானந்த மத்திய
கல்லூரி மைதானத்தில், டைனமிக் விளையாட்டுக்கழகத் தலைவர் எஸ். டனிஸ்காந்
தலைமையில் நடைபெற்றது.
கோலாகலமான முறையில் தொடர்ச்சியாக மூன்று நாட்கள்
சிறப்பாக இடம்பெற்ற இறுதிநாள் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜன் கலந்துகொண்டார்.
மேலும் பல அதிதிகளும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இருபது
அணிகள் கலந்துகொண்ட ஆண்களுக்கான போட்டியில் சம்பியனாக Fire Horses (2012
A/L Batch) அணியினர் தெரிவு செய்யப்பட்டதுடன் இரண்டாமிடத்தை Scorpions
(2022 A/L Batch) அணியினரும் தெரிவு செய்யப்பட்டனர்.
மேலும்
எட்டு அணிகள் கலந்துகொண்ட பெண்களுக்கான போட்டியில் சம்பியனாக Revengers
(2021 A/L Batch) அணியினர் தெரிவு செய்யப்பட்டதுடன் இரண்டாமிடத்தை Royal
Blasters (2025 A/L Batch) அணியினரும் தெரிவு செய்யப்பட்டனர்.
மூன்று நாட்களாக இடம்பெற்ற இச்சுற்றுத்தொடரில் இறுதிப்போட்டிக்கு பயர் கோஸஸ் மற்றும் ஸ்கோபியன் அணி தெரிவாகியிருந்தது.
அப்போட்டியில்
முதலில் துடுப்பெடுத்தாடிய பயர் கோஸஸ் அணியினர் 52 ஓட்டங்களை பெற்றுக்
கொண்டனர். 53 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்திய ஸ்கோபியன் அணி 47
ஓட்டங்களை மாத்திரமே பெற்று வெற்றிவாய்ப்பை இழந்தது.
இப்போட்டியில்
ஆட்டநாயகன் விருதை பயர் கோர்சஸ் அணி வீரர் சர்மிலகாந்த் பெற்றுக்
கொண்டதுடன், சிறந்த பந்துவீச்சாளர் விருதை சனோசன் தனதாக்கிக் கொண்டார்.
தொடர் ஆட்ட நாயகன் விருதை டைட்டன்ஸ் அணியின் சுலக்ஷன் பெற்றுக் கொண்டார்.
அதிதிகளால் வெற்றிபெற்றவர்களுக்கு கிண்ணங்களும் பதக்கங்களுக்கும் பணப்பரிசில்களும் மேலும் பல சிறப்பு பரிசில்களும் வழங்கப்பட்டன.




Post A Comment:
0 comments so far,add yours