நூருல் ஹுதா உமர்



சாய்ந்தமருது பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான கோட்டமட்ட மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலய மாணவர்கள் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி மொத்தமாக 44 வெற்றியிடங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

வருடாந்தம் கோட்ட, வலய மற்றும் மாகாண மட்டங்களில் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெற்று வரும் இப்பாடசாலை, இம்முறையும் தனது விளையாட்டு ஆற்றலை உறுதிப்படுத்தியுள்ளது.

இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் அடுத்த கட்டமான வலய மட்ட மெய்வல்லுனர் போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ளனர். மாணவர்களின் இவ்வெற்றி பாடசாலை சமூகத்தினரிடையே மகிழ்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு சாதனை புரிந்த மாணவர்களுக்கு பாடசாலை நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தமது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் மாணவர்களுக்கு தொடர்ச்சியான பயிற்சிகளை வழங்கி வழிநடத்திய பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் எம்.எப்.எம். றிபாஸ் மற்றும் விளையாட்டு பயிற்றுவிப்பாளர் என்.எம்.எ. ஆபாக் ஆகியோருக்கும் பாடசாலை சமூகம் சார்பில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours