(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நோயாளிகளைப் பார்வையிட வருகை தருபவர்களுக்காக வைத்தியசாலை நிர்வாகம் விதிமுறைகள் அடங்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

அந்த அறிவிப்பில், வைத்தியசாலையில்
நோயாளிகளின் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பார்வையாளர்களுக்கு கீழ்க்கண்ட விதிமுறைகள் அமுலில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

அதில்,

• ஒரு நோயாளிக்கு ஒரே நேரத்தில் 2 பேருக்கு மட்டும் அனுமதிக்கப்படுவர்.

• தொற்று நோய் அறிகுறிகள் உள்ளவர்கள் வருகை தருவதை தவிர்ந்து கொள்ளவும். 

• நோயாளியைப் பார்வையிடுவதற்கு 12 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி இல்லை.

• வைத்தியசாலை வளாகத்தில் அமைதியைப் பேணவும்.

• நோயாளிகளின் ஓய்வை பாதிக்கும் எந்தவொரு நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் இருக்கவும்.

• மருத்துவர்கள் வழங்கும் வழிமுறைகள் மற்றும் அறிவுறுத்தல்களை கட்டாயமாகக் கடைபிடிக்கவும். 

இந்நடவடிக்கைகள் வைத்தியசாலை விடுதியில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளின் பாதுகாப்பிற்காகவே மேற்கொள்ளப்படுகின்றன என்பதைப் புரிந்து கொண்டு, தங்களின் பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours