( வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை மாவட்ட ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அக்கரைப்பற்று வம்மியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் ஆலையடிவேம்பு, இலங்கை தமிழரசு கட்சியினரின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் நினைவுக் கஞ்சி வழங்கி வைக்கும் நிகழ்வும் உணர்வுபூர்வமாக இன்றைய தினம் (18) மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றது.






 இறுதி யுத்தத்தின் போது உயிர் இழந்த உயிர்கள் மற்றும் இறுதி யுத்தத்தில் தமிழர்கள் எதிர்கொண்ட துயரங்களை நினைவு கூறும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலும் கஞ்சி வழங்கும் நிகழ்வு வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசங்களில் ஒவ்வொரு வருடமும் மே மாதம் 12 திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வரை அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் முள்ளிவாய்க்கால் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டு இருந்ததுடன் இவ் நினைவு நிகழ்வில் தமிழரசு கட்சியின் அம்பாரை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன், ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர்     ஆர்.தர்மதாச, பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் பிரதேச கிளை நிருவாகிகள் தொண்டர்கள் ஆதரவாளர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours