க.விஜயரெத்தினம்)

கல்வி,உயர்கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சும்,டவர் நாடக அரங்க மன்றமும் இணைந்து கடந்த வருடம்(2025)நாடு முழுவதிலுமுள்ள  பாடசாலைகளுக்கிடையில் மாணவர்களின் "கலையம்சங்களை  விருத்தி செய்யும்"  நோக்கில் மாணவர்களுக்கிடையில் பல்வேறு போட்டிகளை நடாத்தியிருந்தார்கள்.இப்போட்டியில் மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள புதூர் விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்கள் குறுநாடகப்போட்டியில் பங்குபற்றி தேசியரீதியில் மூன்றாம் இடத்தை தட்டிக்கொண்டார்கள்.இப்போட்டியிலே சிறந்த நடிகருக்கான விருதினை கணேசமூர்த்தி சஞ்சய்யும்,சிறந்த வேட உடை,சிறந்த அசைவாக்கத்தினை ஆர்.அரவிந்தும் இலங்கை சனநாயக சோசலிசக்குடியரசின்  பிரதமர் ஹரணீ அமரசூரியவிடம் பணப்பரிசையும்,கேடயத்தையும்,சான்றிதழ்களையும் பெற்றுக்கொண்டார்கள். நாடகப்பொறுப்பாசிரியர் திருமதி.லூசியா ஜேசுதாசன் மற்றும் R.N.R.அரவிந்தும் இந்த குறுநாடகத்தை ஆற்றுகைப்படுத்தியதாக புதூர் விக்னேஸ்வரா வித்தியாலய முதல்வர் கனகராஜ் நிரஞ்சன் ஊடகங்களுக்கு தெரிவித்தார். 







Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours