வெசாக் வாரத்தை முன்னிட்டு பொது நிருவாக, மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மே மாதம் 30 ஆம் திகதி சனிக்கிழமை, 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஜூன் மாதம் 01 ஆம் திகதி திங்கட்கிழமை ஆகிய மூன்று தினங்களும் ஆடு, மாடு, கோழி என்பன அறுப்பது முற்றாக தடை செய்யப்பட்டிருக்கிறது.


இதன் பிரகாரம் கல்முனை மாநகர சபை எல்லையினுள் அமைந்துள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் விலங்கறுமனைகளும்இன்று   முதல் குறித்த 03 நாட்களும் மூடப்பட்டிருக்கும் எனவும் அன்றைய தினங்களில் ஆடு, மாடு மற்றும் கோழிகள் அறுப்பதை முற்றாக தவிர்ந்து கொள்ளுமாறும் வியாபாரிகளையும் பொது மக்களையும் கல்முனை மாநகர சபை கேட்டுக் கொள்கிறது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours