மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட திருப்பழுகாமத்தில், சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு "விறிலியன்ற்" (Brilliant) விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் கலாசார விளையாட்டு விழாவும் பாராட்டு நிகழ்வும் நேற்று (02.05.2026) ஆம் திகதி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இவ் நிகழ்வானதுதிருப்பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய மைதானத்தில், கழகத்தின் தலைவர் கு. வேல்மாறன் தலைமையில் இவ்விழா இனிதே ஆரம்பமானது.

மங்கல விளக்கேற்றல்,இறைவணக்கத்தை தொடர்ந்து தேசியக்கொடி மற்றும் கழகக்கொடி என்பன ஏற்றப்பட்டன. 

அதனைத் தொடர்ந்து தேசியகீதம் மற்றும் கழகக் கீதங்கள் இசைக்கப்பட, விளையாட்டுக்கழக உறுப்பினர்களின் உறுதிமொழியுடன் போட்டிகள் ஆரம்பமாகின.

கலாசார மற்றும் விளையாட்டுப் போட்டிகள்

​இவ்விழாவில் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர், யுவதிகள் மற்றும் மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல பாரம்பரிய கலாசார விளையாட்டுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன.

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், கல்வி மற்றும் ஏனைய துறைகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கும் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

இந்த விழாவின் சிறப்பம்சமாக, பிரதேசத்தின் முன்னேற்றத்திற்காக அயராது உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தின் சேவையைப் போற்றும் வகையில் அவர்களுக்கு விசேட கௌரவிப்பு வழங்கப்பட்டது.

"உழைப்பாளர் தினத்தின் உண்மையான அர்த்தத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த நிகழ்வு அமைந்திருந்தது" எனப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

இந் நிகழ்வில் பிரதம அதிதிகளாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர்

​சோ. ரங்கநாதன், போரதீவுப்பற்று பிரதேசசபைத் தவிசாளர்)வி. மதிமேனன்ஆகியோர் கலந்துகொண்டனர்.

மற்றும்  பிரதேசசபை உறுப்பினர்கள், கல்வி அதிகாரிகள், வங்கி அதிகாரிகள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் ,விளையாட்டுக் கழக உறுப்பினர்கள்,ஊர் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

விறிலியன்ற் விளையாட்டுக்கழக உறுப்பினர்களின் நேர்த்தியான ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இவ்விழாவானது, தொழிலாளர்களைக் கௌரவிப்பதோடு மட்டுமல்லாமல், பிரதேச இளைஞர்களிடையே விளையாட்டு உணர்வையும் ஒற்றுமையையும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது.













(ரஞ்சன்)

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours