(  வி.ரி.சகாதேவராஜா)



வரலாற்று பிரசித்தி பெற்ற மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார மகோற்சவத்தின் தீர்த்தோற்சவம் கடந்த (01) வெள்ளிக்கிழமை சித்ரா பௌர்ணமியன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது.

மகோற்சவ பிரதம குரு சிவஸ்ரீ அ.மு.நிஷாந்தன் குருக்கள் தலைமையில் ஆலய குரு சிவஸ்ரீ கிருஷ்ண பிரியதர்ஷன் குருக்கள் முன்னிலையில் உதவிக்குரு பிரம்மஸ்ரீ பிரபாத் சர்மா உதவியுடன் இவ் வருட அலங்கார மகோற்சவம் நடைபெற்று வந்து தீர்த்தோற்சவத்துடன் நிறைவடைந்தது.

ஆலய தலைவர் கி.ஜெயசிறில் ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்ட பரிபாலன சபையினர் காலை 6 மணியளவில் திருப்பொற்சுன்னமிடித்து ஊர்வலமாக 2 கிலோமீட்டர் தூரம் சென்று சமுத்திரத்தில் தீர்த்தமாடினர்.

பின்னர் ஆலயத்திற்கு வந்து சிறப்பு அலங்கார திருவிழா மற்றும் திருப்பொன்னூஞ்சல் நிகழ்வுடன் நிறைவடைந்தது.

பணிநயப்பு விழாவும் இடம்பெற்றது.அதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் சிவஸ்ரீ அ.மு.நிஷாந்தன் குருக்கள் ,சிவஸ்ரீ கிருஷ்ண பிரியதர்ஷன் குருக்கள்
,திருமதி கமலா தேவி விவேகானந்தம்
,கே.கணேசன்
 ,வி.ரி.சகாதேவராஜா
,திருமதி எல்.ரிஷாந்தினி ஆகியோர் விசேட விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours