( வி.ரி.சகாதேவராஜா)

வரலாற்றுச் சிறப்புமிக்க  கதிர்காம கந்தன் ஆலயத்தின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆடி வேல் விழா (ஆடி மகோற்சவம்) தொடர்பான சுப நேரங்கள் (சுப முஹூர்த்தங்கள்) நேற்று முன்தினம் கையளிக்கப்பட்டன.

​ருஹுனு மகா கதிர்காமத் தேவாலயத்தின் 2026ஆம் ஆண்டு வருடாந்த ஆடி மகோற்சவத்தை பாரம்பரிய முறைப்படி நடத்துவதற்கான நேர அட்டவணை (நக்கத் பத்திரய), தேவாலயத்தின் ஜோதிடராக (நக்கத் ராள) செயற்படும் டெலான் பிரபாஸ்வரவினால், தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே
 ஆரச்சிகே திலிண மதுஷங்கவிடம் நேற்றைய முன் தினம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.

​பாரம்பரிய சடங்கு சம்பிரதாயங்களுக்கு முன்னுரிமை அளித்து, இம்முறை ஆடி மகோற்சவத்தை மிகவும் விமர்சையாக நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டு வருகின்றது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours