கல்வி என்பது ஒரு பிள்ளையின் அறிவு. திறன்இ மனப்பாங்குஇ தேர்ச்சிகள் என்பவற்றை விருத்தியடைச் செய்து சமூகம் காண விளைகின்ற சான்றோர்களை உருவாக்குவதே ஆகும். என பல்வேறு கல்விச் சிந்தனையாளர்களினதும் கருத்துத் தொகுப்பாகும்.
கற்பித்தல் என்பது ஒரு கலை. அக்கலையினை செவ்வனே வெளிப்படுத்துவதற்குத் துணை புரியும் செயற்பாடாக ஆசிரியர் பயிற்சி விளங்குகிறது. அனைத்து ஆசிரியர்களும் இப்பயிற்சியினை மேற்கொள்வதற்கு எண்ணற்ற பல காரணங்கள் உள்ளன. ஒரு மாணவனின் திறமைகளை அவனது வெற்றிக்கு தடங்கலாக இருப்பவற்றை தகர்த்தெறிய துணைபுரிபவராகவும் ஆசிரியர் விளங்குவதால் 'உயிருள்ள ஒரு ஓவியத்தைப் படைக்கும் சிற்பியாக' ஆசிரியரைக் குறிப்பிடலாம்.
ஆசிரியரின் கடமை பாடத்திட்டம்இ பாடக்குறிப்பிற்கு அமைவாக கல்வியை புகட்டுவது மட்டுமல்ல. மாணவர்களின் மனங்களை வென்று அவர்களின் வாழ்வில் மறக்க முடியாத நபராக திகழ்வதற்கு சேவையாற்ற வேண்டும். நமது சேவை ஊதியத்திற்கான ஒரு செயற்பாடு எனக் கருதாமல் கல்வியைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி கல்வி கற்பதன் நோக்கம்இ அதன் தேவை என்பவற்றை உணர்த்தி கல்வி கற்பதற்கு மாணவர்களைத் தூண்டுபவர்களாக சேவையாற்ற வேண்டும் என்பதை ஆசிரியர் பயிற்சி தெளிவுபடுத்துகின்றது.
இத்தகைய ஆசிரியர் பயிற்சியை வழங்கும் பல்வேறு நிறுவனஙகள் இருப்பினும் அவற்றுள் ஆசிரியர் கலாசாலைக்கு என தனியிடம் உண்டு. ஆசிரியர் கலாசாலைக்கு என பயிற்சிக்கு வருகின்ற ஆசிரிய மாணவர்கள் கலாசாலைகளில் கல்வி அறிவு மட்டுமன்றிஇ பல்வேறு துறைகளில் தம்மை ஈடுபட வைத்து ஆளுமைமிக்க ஆசிரியர்களாக பட்டைதீட்டப்பட்ட இரத்தினங்களாக மீண்டும் புதுப்பொலிவுடன் சேவைக்கு அனுப்பப்படுகிறார்கள். இத்தiகைய ஆசிரிய பயிற்சியை வழங்கும் ஆசிரியர் கலாசாலைகள் இலங்கையில் எட்டு(8) காணப்டுகின்றன. அவற்றுள் தமிழ் மொழி மூலமான நான்கு காலாசாலைகளும் காணப்படுகின்றன.
பொதுவாக கற்றல் கற்பித்தல் அணுகுமுறைகள் எவ்வாறானதாக அமைய வேண்டும். கற்பித்தற் சாதனங்கள் அமைக்கும் போது கவனத்திற்கொள்ள வேண்டிய அம்சங்கள். அச்சாதனங்களின் பயன்பாடுஇ பயன்படுத்தும் விதம் என்பன தொடர்பாகவும் நமது கற்பித்ததலை கவரச்சியாக அமைக்க துணையான நுட்பங்கள் குறிப்பிட்ட பாட வேளைக்குள் எவ்வாறு பாடத்தை திட்டமிலாம். வகுப்பறைச் சூழல். மாணவர்களின் மனவியல்புகளை புரிந்து கொண்டு கற்பிக்கும் விதம் தொடர்பாகவும் ஆசிரியர் பயிற்சியில் போதிக்கப்படுகின்றன.
இத்தகைய பயிற்சிகளைப் பெற்றுக்கொள்ளும் ஆசிரியர்கள் பின்வருவனவற்றில் கைதேர்ந்தவர்களாக மிளிர்வர். அவையாவன:- தங்களது வாண்மையை விருத்தி செய்து கொள்ள முடியும்.முன்மாதிரியானவர்களாக திகழ்தல். வகுப்பறையில் பிள்ளையை அறிதல். அர்ப்பணிப்பு மனப்பாங்கினைக் கொண்டவராக இருத்தல்
இவற்றுள் முன்மாதிரியானவர்களாக நடந்து கொள்ளுதல் என்பதை சற்று விரிவாக நோக்கின் தாம் கடமையாற்றும் பாடசாலைக்கு பாடசாலை ஆயத்த மணி அடிப்பதற்கு முதல் பாடசாலைக்கு சென்றடைதல் என்பது கூட முன்மாதிரியான நடத்தையின் ஆரம்பமாகும். இது மட்டுமல்ல தமது பேச்சு. செயல. நடத்தைகள். அணிந்து கொள்ளும் ஆடைகள். சிகை அலங்காரங்கள். நட்புறவைப் பேணுதல். அறநெறி ஒழுக்க விழுமியங்களைப் பேணுதல். அர்ப்பணிப்பு உள்ளவராகத் திகழ்தல். கடமைகளைப் பொறுப்பேற்றல். பொறுப்பேற்ற கடமைகளை நேர்த்தியாகவும். செம்மையாகவும் செய்து முடித்தல். வகுப்பறைக்கு நேரத்துடன் சமுகமளித்து பாடவேளை முழுவதும் மாணவர்களுக்குப் பற்றுடன் சேவையாற்றுதல். விடுமுறை எடுப்பதை இயன்றளவு குறைத்துக்கொள்ளுதல்.சமூக நிறுவனங்களுடன் நட்புறவுடன் பழகுதல். ஆலய வழிபாடுகளில் பங்குபற்றுதல். பணிவுள்ளவர்களாகவும். பெரியோரை மதிப்பவர்களாகவும். நிர்வாகத்துடனும். சக உத்தியோகத்தர்களுடனும் நடபுறவுடன் பேணுதல். வளர்ந்து வரும் அறிவியல் வளர்ச்சிக்கு முகம்கொடுத்து. என்றும் புதியவற்றை தேடி அறியும் ஆற்றல் உள்ளவர்களாகவும் சேவை புரிய வேண்டும்.
மேலும். பிள்ளையை அறிதல் என்பதும் மிகமிக இன்றியமையாத ஒன்றாகும். இங்கே பிள்ளையை அறிதல் என்பது மாணவர்களின் பெயர்களைக் கூறி அழைத்தல் கூட ஆசிரியர் மாணவர் இடையுறவின் முக்கிய கூறாகும். பெயரை அறிதல் மட்டும் போதாது. மாணவர்கள் தொடர்பான பல்வேறு தகவல்களை நேரடியாகவும்இ மறைமுகமாகவும் உளவியல் ரீதியான கண்ணோட்டத்தில் மாணவர்களின் மனங்கள் பாதிப்படையாத விதத்தில் அறிந்து. அவர்களைப் பாடசாலைக் கல்வியில் விருப்புடன்; வரக் கூடியதான அணுகுமுறைகளைக் கையாண்டு அவர்களை தவறாமல் பாடசாலைக்கு வருப்புடன் வரச் செய்து கல்வியைக் கற்கக் கூடிய சூழ்நிலையை ஆசிரியர் உருவாக்குவார் என்றால் அவர் தன் பணியில் வெற்றி கண்டவராகக் கருதப்படுவார்.
மாணவர்களுடன் கதைக்கும் வார்த்தைகள் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களை 'உன்னால் முடியும்' என உற்சாகப்படுத்தி. தட்டிக்கொடுத்து முதல் நிலையை அடைவதற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டியதும் அவசியமாகும். மாவீரன் நெப்போலியன் கூறியதைப் போல 'உன்னால் முடியாதது என்று ஒன்றுமில்லை' என உற்சாகப்படுத்துங்கள். அணு விஞ்ஞானி அமரர் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் கூறியதைப் போல மாணவர்களின் சிந்தனையைத் தூண்டி அவர்களது வளர்ச்சியை நோக்கி ' கனவு காண வையுங்கள்' 'மனிதனின் பிறப்பு ஒரு சந்தர்ப்பமாக இருந்தாலும் இறப்பு என்பது சரித்திரமாக இருக்க வேண்டும்.' என்பதற்கிணங்க அர்ப்பணிப்புடன் ஆசிரிய சேவையை புரியும் ஆசிரியர்களை உருவாக்க ஆசிரிய பயிற்சி இன்றியமையாததாகவே விளங்குகிறது.
குறிப்பாக ஆசிரியர்கள் மாணவர்களின் நிலையிலிருந்து பயிற்சியைப் பெறும்போது தனது கற்பித்தல் செயலொழுங்கின் நிறைகுறைகளை இனங்கண்டுகொள்ள வாய்ப்பாக அமையும். இருவருட ஆசிரியர் பயிற்சியில் ஆசிரியர்களுக்கு புகட்டப்படும் பாடங்கள் தனது சேவையின் காலப்பகுதி நிறைவடையும் காலத்தையும் தாண்டி வாழ்நாள் பூராகவும் நம்முடன் இணைந்து வருவனவாகும்.
இப்பயிற்சியானது நல்ல நடத்தை மாற்றத்தை ஏற்படுத்துவதாக அமைகின்றது. மாணவர்களின் சிறந்த பெறுபேற்றுக்குதான்; பொறுப்புக் கூறுவது போல அவர்களின் தோல்விகளுக்கும் கற்பிக்கும் ஆசிரியர்களே பொறுப்புக் கூற வேண்டும். மாணவர்களின் வாழ்வை வெற்றிகொள்வதற்கு ஏணியாக ஆசிரியர் செயற்பட்டு அவர்களின் மனங்களை விட்டு நீங்காத ஆசிரியர்களாக திகழ வேண்டும் என்பதையே ஆசிரியர் பயற்சி உணர்த்துகின்றது.
சுருக்கமாகக் கூறின் ஒவ்வொரு ஆசிரியர்களும் தமது ஆசிரிய வாண்மையை விருத்தி செய்துகொள்வதற்கு ஆசிரிய கலாசாலைகளில் மேற்கொள்ளும் ஆசிரியர் பயிற்சி நெறி ஒரு வழிகாட்டியாக விளங்குகின்றது. அந்தவகையில்இ ஆசிரியர்களின் வாண்மை விருத்திக்கு ஆசிரிய கலாசாலையின் வகிபாகம் இன்றியமையாதது.
சாள்ஸ் மொறின்
BA., MA., MED., PGDE., PGDEM
SLTES -

Post A Comment:
0 comments so far,add yours