(கனகராஜா சரவணன்) 




வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பாவக்கொடிச்சேனை சிவன்கோவில் பாறையில் காயங்களுடன் முதியவர் ஒருவர்  திங்கட்கிழமை (25) காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


உன்னிச்சை நெடியமடுவைச் சேர்ந்த 63 வயதுடைய கணவதிபிள்ளை யோகராசா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்டகப்பட்டுள்ளார்.


குறித்த பகுதியில் சம்பவ தினமான  காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக கிடப்பதாக பொலிசாருக்கு பொது மக்கள் அறியப்படுத்தினர்


இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் தடவியல் பிரிவு பொலிசார் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பொலிசாருக்கு நீதவான் உத்தரவிட்டார்


இதனை தொடர்ந்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைத்துள்ளனர்


இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்  

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours