மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் சிறு தொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள "MINI FAIR - 2026" உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கான விற்பனைக் கண்காட்சி இன்று (26.05.2026) ஆரம்பமாகியுள்ளது.
போரதீவுப்பற்று பிரதேசத்தின் உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக இந்த விசேட சந்தை வாய்ப்பு மற்றும் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்கண்காட்சியில் உள்ளூர் கைவினைப் பொருட்கள், பாரம்பரிய உணவுப் பொருட்கள், ஆடைகள் மற்றும் பனை ஓலை சார்ந்த பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் உற்பத்திகள் காட்சிப்படுத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.
பொதுமக்கள் மற்றும் ஆர்வலர்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டு உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
(ரஞ்சன்)

.jpeg)

Post A Comment:
0 comments so far,add yours