(எம்.எஸ்.எம்.ஸாகிர்)


மாணவர்களினதும் பொதுமக்களினதும் கலைத்திறன்களையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்தும் நோக்கில் சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயம் நடத்தும் சித்திரக் கண்காட்சி 2026 இற்காக ஆக்கங்கள் கோரப்படுகின்றன.

சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலய சித்திரக் கண்காட்சி ஏற்பாட்டுக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இச்சித்திரக் கண்காட்சிக்கு மாணவர்களும் பொதுமக்களும் தங்களது சித்திர மற்றும் கலை ஆக்கங்களை சமர்ப்பிக்கலாம்.

இதில் இயற்கைக் காட்சிகள், உருவப்படங்கள், சமூக விழிப்புணர்வு ஓவியங்கள், நவீன கலைப்படைப்புகள், கைவினை மற்றும் படைப்பூக்கக் கலை ஆக்கங்கள் போன்ற கருப்பொருளில் அமைந்த ஆக்கங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் ஆக்கங்களாகும்.

இதில் பாவிக்கப்படும் வர்ணங்களாக, நீர் வர்ணம், ஒயில் வர்ணம், பெஸ்டல் வர்ணம் என்பன பாவிக்கலாம்.

ஆக்கங்கள் A3 size பேப்பர், பிரிஸ்டில் போர்டு அல்லது  கேன்வாஸ் பேப்பர் (canvas board) இல் வரைந்து அனுப்பலாம்.

தெரிவுசெய்யப்படும் மூன்று ஆக்கங்களுக்கு பெறுமதியான சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கப்படவுள்ளது.

ஆக்கங்களை எதிர்வரும் 15 ஆம் திகதி திங்கட்கிழமை அன்றோ அல்லது அதற்கு முன்னரோ சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலயத்தில் ஒப்படைக்கவும்.

மேலதிக தகவல்களை 077 9910841 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

“ உங்கள் கற்பனைக்கு வண்ணம் தீட்டி, கலை உலகில் உங்கள் முத்திரையைப் பதியுங்கள்!
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours