(வி.ரி.சகாதேவராஜா)


சம்மாந்துறை கோரக்கோயில் அருள்மிகு ஸ்ரீ அகோர மாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த சடங்கும் தீ மிதிப்பு வைபவமும் கடந்த 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆலய பிரதம பூசகர் சக்தி உபாசகர் மு.ஜெகதாதன் ஐயா தலைமையில் ஆரம்பமாகியது.

மகோற்சவத்தின் பிரதான நிகழ்வாக தீ மிதிப்பு வைபவம் ஜூன் 29 ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.

20 ஆம் திகதி சனிக்கிழமை பாற்குடபவனி இடம் பெற்றது.

திருவிழா நாட்களில் தினமும் காலை 6.30 மணிக்கு விசேட பூஜைகள் நடைபெறுவதுடன், மாலை நேரங்களில் சமய சொற்பொழிவுகள், கிரியாக்கள் மற்றும் உற்சவ நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.


 மேலும், ஜூலை 6 ஆம் திகதி எட்டாம் நாள் சடங்குகளுடன் மகோற்சவ நிகழ்வுகள் நிறைவடையவுள்ளன.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours