பாண்டிருப்பை பிறப்பிடமாகவும் கல்முனையை வசிப்பிடமாகவும் கொண்ட
மருத்துவ நிபுணர் திருமதி.குமுதினி துரைரத்தினம் இன்று ( 22/06/2026) காலமானார்.
பூதவுடல் தற்போது கார்மெல் பற்றிமா கல்லூரிக்கு அருகில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
Dr. குமுதினி ஆலயங்களின் புனரமைப்பு பணிகளுக்காகவும் பங்களித்து வந்தவர் அத்தோடு சுனாமி நம் கரையோரங்களை தாக்கி அழித்தபோது பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுத்து நிவாரணம் வழங்குவதில் அல்லும் பகலும் முழுமூச்சுடன் செயல்பட்ட ஒரு துணிகரமான மருத்துவராவார்.
அன்னாரின் பூதவுடல் இன்று பிற்பகல் பாண்டிருப்பு இந்துமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
மருத்துவத் துறையில் உச்சம் பெற்றிருந்த அவர், தன்னை நாடி வருகின்ற நோயாளிகளுக்கு புன்னகையால் சிகிச்சை வழங்கி வந்தவர். எளிமையும் அன்பும் பண்பும் அரவணைப்பும் புரிந்துணர்வும் இவரது அடையாளம் என்பது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)

Post A Comment:
0 comments so far,add yours