( வி.ரி.சகாதேவராஜா)
 வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காமக் கந்தன் ஆலயத்தின்
வரலாற்றுச் சிறப்புமிக்க வருடாந்த ஆடிவேல் பெருவிழாவின் முதன்மை மற்றும் தனிச்சிறப்புமிக்க சடங்கான கன்னிக்கால் நடும் வைபவம் நேற்று (1) திங்கள் கிழமை அதிகாலை கதிர்காமக் கந்தனின் சன்னிதியில் இடம்பெற்றது.

நேற்றுடன் ஆரம்பமாகிய இந்தப் புனித விழாக்காலம்
அடுத்துவரும் 45 நாட்களில் பக்திப் பேரொளியினாலும் பக்தர்களின் அரோகரா கோஷங்களினாலும்
திருத்தலத்தைத் திகழச் செய்யவுள்ளது.

 எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி கொடியேற்றத்துடன் தொடங்கி  29 ஆம் திகதி தீர்த்தம் வரை கதிர்காமக் கந்தனின் ஆடிவேல் பெருவிழா கோலாகலமாகவும் ஆன்மிகச் செழுமையுடனும் நடைபெறவுள்ளது.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours