(வி.ரி.சகாதேவராஜா)
பெரியநீலாவணை
அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய கும்மிப்பாடல் வெளியீட்டு விழா கடந்த
வெள்ளிக்கிழமை(19) ஆலய முன்றலில் ஆலய தலைவர் எஸ். குபேரன் தலைமையில்
நடைபெற்றது. .
இசையின்
மூலம் இறைவன் மீது தீவிரமான பக்தியை வெளிக்காட்டும் வகையில் அருள்மிகு
பேச்சியம்மன் கும்மிப்பாடலாக இவ் இறுவெட்டு அமைந்துள்ளது.
இக் கும்மிப்பாடலு க்கான வரிகள் மற்றும் பாடலை கோபாலகிருஷ்ணன் கிருஸ்ணசௌறி பாடியுள்ளார்.
இவரோடு அழகு ததும்பும் பெண்குரலில் பாடகி கானக்குயில் ருக்மாங்கதன் ரிஷார்த்தகி பாடியுள்ளார்.
பாடகி
ரிஷார்த்தகி தற்போது பட்டிருப்பு தேசிய பாடசாலையில் தரம் 10 இல்
கல்விகற்று வருகின்றார். இக் கும்மிப்பாடலு க்கான இசை மற்றும் ஒளிப்பதிவு
ஜெ. சங்கர்ஜன் செய்துள்ளார்.
பாடகி
ரிஷார்த்தகியின் தந்தை ருக்மாங்கதன் சமூக செயற்பாட்டாளராகவுள்ள தோடு
தற்போது இலங்கை மின்சார சபையின் மின்வாசிப்பாளராக கடமையாற்றிய வருகின்றார்.
இவரது மனைவி துவேனிகா வும் சமூக ஆர்வலராக செயற்படுகின்றமை
குறிப்பிடத்தக்கது.




.jpg)


Post A Comment:
0 comments so far,add yours